இலங்கையில் கொரோனாவின் அபாயத்தால் 14 இடங்கள் முற்றாக முடக்கம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் அபாயத்தால் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை – போரத்தொட்டை பகுதியும், ஜா – எலவில் இரு பகுதிகளும்,

யாழ். மாவட்டத்தில் அரியாலை – தாவடி பகுதியும், களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம மற்றும் பேருவளை பகுதிகளும், கண்டி மாவட்டத்தில் அக்குரணை பகுதியும், புத்தளம் மாவட்டத்தில் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியவின் ஒரு பகுதியும்,

கொழும்பு மாவட்டத்தில் கிராண்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானை – அர் ஜனமாவத்தை ஆகிய பகுதிகளும்,

குருநாகல் மாவட்டத்தில் கட்டுபொத்தை – கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியும், மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ மற்றும் கொஹூகொட பகுதிகளும் இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 74 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏழு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com