
சமகாலத்தில் இணையம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணையம் ஊடாக விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும் சில்லறை விற்பனையாளர்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பொருட்களை வாங்குவதற்கு இணையம் ஊடாக பணம் செலுத்துவது குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் நிரந்தர முகவரியை உறுதி செய்த பின்னர் இணையம் ஊடாக பணம் செலுத்துவதற்கு தீர்மானிக்குமாறு பொது மக்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விற்பனையாளர்களினால் ஏமாற்றப்பட்டவர்கள் இருப்பின் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு குறுந்தகவல் ஊடாக முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை நாடு இக்கட்டான நிலையில் உள்ளதால், பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்த விற்பனையாளர்களிடம் நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒன்லைன் மூலம் கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளிலுள்ள மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.