
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் அறிவுறுத்தலின் பிரகாரம் மட்டக்களப்பு அரசாங்க போக்குவரத்து சாலைகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டும் சேவையினை வழங்கும்படியாக பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.
இச்சேவையில் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவு ஒரு பஸ்வண்டியில் 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படல் வேண்டும் எனவும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசங்களை போடுவதுடன் சமூக இடைவெளியையும் கண்டிப்பாக பின்பற்றப்படல் வேண்டும் – எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.