
பொதுத் தேர்தலை ஜுன் மாதம் 20ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தினார்.
நாட்டில் கொரோனா அச்சம் நிலவிவரும் நிலையில் பலரும் பொதுதேர்தலை பிற்போடுமாறு கோரி வந்தனர்.
இந்த நிலையில் ஜுன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.