வவுனியாவில் சிறுமி மரணம் கொரோனாவா எனச் சந்தேகம்!

வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த குறித்த சிறுமி சுவிவீனம் காரணமாக நேற்றயதினம் மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடைய சிறுமியே
சாவடைந்துள்ளார்.

இதேவேளை குறித்த சிறுமிக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவு தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com