மட்டக்களப்பு பெண் கொரோனாவால் லண்டனில் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் லண்டன் ஈஸ்ட்ஹாம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மிஹ்ராஜியா முஹைதீன் என்பவர் கொவிட் 19 காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று திங்கள்கிழமை (20.04.2020) லண்டனில் மரணமடைந்துள்ளதாக லண்டனில் வசிக்கும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

கொவிட் 19 நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 20ம் திகதி வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

மிஹ்ராஜியா முதியோர் காப்பகத்தில் பணிபுரிந்தார் அங்கு கடமை புரியும் போதே அவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றியது.

இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளைகளுமாக மூன்று பிள்ளைகளின் தாயான மிஹ்ராஜியா முஹைதீன் வாழைச்சேனையைச் சேர்ந்த முபாரக்கை திருமணம் செய்து லண்டனுக்கு வசிப்பதற்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com