

ஊரடங்கு அமுலில் இருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலையில் களவு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த பாடசாலையின் நீர் இறைக்கும் இயந்திரம், மின்விசிறிகள், மின் எறியிகள் முதலிய களவாடப்பட்டுள்ளன. இன்று(20 ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது அதிபர் பாடசாலைக்குச் சென்ற போது, அங்கு இரண்டு மின்விசிறிகள் கழட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு சந்தேகமடைந்து சோதனை செய்த போதே குறித்த திருட்டு சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பாடசாலையின் அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.