
கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் வளர்க்கும் பசுமாடுகளை இறைச்சிக்காக இரவோடு இரவாக களவெடுக்கும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதிகளை சாதமாகப் பயன்படுத்தி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் மூன்று பசுமாடுகள் இவ்வாறு பரிதாபமான நிலையில் களவாடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றும்(19) இவ்வாறு குறித்த பகுதியின் பசுமாடு ஒன்று கொல்லப்பட்டு, அதன் தலை மற்றும் தோல்கள் கால்வாய்பகுதியில் கழிவுகளாக போடப்பட்டுக் கிடந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

