
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ் போதனாவைச் சேர்ந்த ஒருவரும், பலாலி தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 16 பேரும் கொரோனா அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் நால்வர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்தோடு மேலும் சிலர் குணமடையும் நிலையில் இருக்கின்றனர்.ஆனால் இதனை வைத்து கொரோனா அபாயம் நீங்கி விட்டதென்றில்லை. மக்கள் சுகாதாரப் பிரிவின் அறிவிரைகளைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.