குழு மோதல் : இளைஞன் பரிதாபமாக பலி, 5 பேர் காயம்

வீரகெட்டிய-மொரயாய பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட குழு மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மோலில் 5 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.