அவெஞ்சர்ஸ் பட நடிகைக்கு திருமணம் முடிந்தது!

மார்வெல் அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளது, இதுவரை வெளியான நான்கு அவெஞ்சர்ஸ் திரைப்படங்களும் உலகளவில் வசூல் சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தில் Natasha கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமான நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன். இவர் ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் கொலின் ஜொஸ்ட் என்பவருக்கும் கடந்த வாரம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. இந்த செய்தி வெளியாகி தற்போது உலகளவில் அவரின் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது