கொக்கல்ல தொற்றாளியுடன் தொடர்புடைய 125 பேருக்கு தொற்றில்லை!

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட காலி – கொக்கல்ல ஆடை தொழிற்சாலை பெண் ஊழியருடன் தாெடர்புடையதாக 125 பேருக்கு இன்று (30) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு கிடைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.