மொரட்டுவையில் 42 பேருக்கு கொரோனா!

மொரட்டுவையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையை அடுத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே

இவர்கள் அடையாளம் காணப்பட்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பரிசோதனையின் பின்னரே மொரட்டுவ பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொரளையில் 20 பேருக்கும் கொட்டாஞ்சேனையில் 44 பேருக்கும் மட்டக்குளியில் 36 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com