கொரோனாப் பரவல் அச்சம் காரணமாக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

கொரோனா பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு நேற்று (27) இதனை அறிவித்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) மூன்றாம் வருட, இரண்டாம் அரையாண்டுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 31ம் திகதி முதல் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இணையவழி வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறிக்குரிய புதிய மாணவர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாள்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்படும் என்றும், பரீட்சைகள் பற்றிய மேலதிக தகவல்களை 021 222 3612 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com