
வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களுடன் பழகிய சுமார் 200 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு நேற்று மாலை (19) அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் மார்ச் மாதம் இந்தியா, தம்பதிவ சென்று திரும்பியிருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டிருந்தது.
இன்று இரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 17 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியிலிருந்து மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்றிருப்பதை கண்டறிந்த சுகாதார ஊழியர்கள் குறித்த தோட்டப்பகுதியைச் சேர்ந்த அனைவரையும் இன்று பரிசோதனைக்குட்படுத்தி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
19ம் திகதி கொரோனா பாதிப்புக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டதில் ஆகக்குறைந்தது 12 பேர், ரொட்டிக் கடைத் தோட்டம் என அறியப்படும் குறித்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை அங்கு வாழ்ந்த அனைத்து குடும்பங்களும் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அங்கிருந்த பலர் உணவுப் பொருட்களைப் பரிமாறியும், அடிக்கடி கரம்போர்ட் மற்றும் கார்ட்கள் விளையாடியும் இருந்துள்ளதால் பலருக்குத் தொற்று பரவியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.