80 சுகாதார ஊழியர்களை இழந்த பிரித்தானியா-பாதுகாப்பு உடைகள் இல்லை என்றால் சிகிச்சை செய்ய மாட்டோம்!

பாதுகாப்பு உடைகள் இல்லை என்றால் சிகிச்சை செய்ய மாட்டோம்-பிரித்தானிய சுகாதார ஊழியர்கள்!

மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு உபகாரணங்கள் (PPE) பற்றாக் குறையாக உள்ளதாகவும் தாங்கள் கோவிட் -19 நோயாளர்களுக்கு மருத்துவம் செய்வதை நிறுத்த போவதாககூறியதை அடுத்து, பல சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

மருத்துவர்களுக்கான கூட்டமைப்புகள் கூறுகையில் தங்களுடைய உறுப்பினர்ளின் உயிரையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் பணயம் வைக்க முடியாது என்று கூறி தாம் மருத்துவர்களையும் மற்றைய ஊழியர்களையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. நாங்கள் பாவித்த பாதுகாப்பு உபகரணங்களை திரும்பவும் பாவிக்கமுடியாது என்றும் மருத்துவ ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கியில் இருந்து வருவதாக இருந்த தனிநபர் பாதுகாப்பு உடைகள் வர தவறியதை அடுத்து இந்த சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பின் துணை அதிகாரி ஜெனி ஹாரிஸ் இதற்கு பதிலளிக்கையில், உடனடியாக தான் பக்குவப் பட்டவர்களுடன் கலந்துகலந்துரையாட வேண்டும் என்றும், இந்த தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சுற்றி உள்ள பிரச்சினையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மருத்துவ உபகரணங்ளை திரும்பவும் பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலை மேலோட்டமாக எடுத்து உரையாடிய பிரித்தானிய துணை தலைமை மருத்துவ அதிகாரி நெருக்கடியாக உள்ள இந்த சர்வதேச சூழ்நிலையில் பிரித்தானியா சர்வதேசத்துக்கு தயார்நிலையில் இருப்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது என்று தெரிவித்தார்.

இதே வேளையில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவர்களை NHS கூட்டமைப்பு ஆதரிக்கிறது.

டாக்டர் ஜென்னி ஹாரிஸ் ஒரு தொலைக்காட்சி நிருபரிடம் பேசுகையில், நாங்கள் இன்னும் வயது வந்தவர்களாக பாதுகாப்பு உபகரணம் வழங்குவது பற்றி விரிவான கலந்துரையாடல் நடத்த வேண்டும், அழிவை உண்டாக்குகிற கொள்கையால் அரசாங்கம் குற்றச்சாட்டிற்கு முகம் கொடுத்து வருகிறது என்று கூறினார்.

உடை, முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்த மருத்துவ நிபுணர்கள் நிர்பந்திக்கபட்டதால், தங்கள் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று காரணம் கூறி அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ், ராயல் காலேஜ் ஆப் செவிலியர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பு இணைந்து, தங்கள் சொந்த நலனைப் பணயம் வைக்கும் முன்னணியில் உள்ளவர்கள் ஆயிரக்கணக்கானோரை தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com