இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்த இரு பெண்கள்!!

தீவிரமாக ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான நபர்கள் வெலிகந்தை, கந்தகாடு இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக தெரியவருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் சிலர் நேற்றிரவு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இந்த நபர்களில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும் அவர்கள் தமது ஆடைகளை களைந்து விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

அந்த அளவுக்கு இந்த பெண்கள் மிக மோசமாக ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். இவர்களை போதைப்பொருளில் இருந்து மீட்பதற்காக புனர்வாழ்வு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com