தலைமன்னாரில் கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், தலைமன்னார் கிராம பகுதியில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை நேற்று வியாழக்கிழமை(22) மாலை மீட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் தலை மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தலைமன்னார் கிராமம் பகுதியில்   14 கிலோ 170 கிராம் கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

 மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ஆகியோரின் வழிகாட்டலில் மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உபபொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர்.

இதன்போது குறித்த கேரள கஞ்சா பொதிகளை  தம்வசம் வைத்திருந்த, மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் தலை மன்னார் கிராமம் சிலுவை நகரைச் சேர்ந்த 21 மற்றும் 49 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்து செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்   மன்னார்  நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.