தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 281 பேர்!

முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இன்றைய தினம் 281 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் கொத்தணியில் 105 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.

கொக்கல உணவகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.