
புதிய கொரோனா வைரசு தாக்கத்தின் காரணமாக தற்பொழுது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் விடயதானத்திற்கு அமைவாக வாகனங்களை பதிவு செய்யும் பணிகள் மற்றும் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் வீடுகளில் இருந்து கடமைகளை நிறைவேற்றும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வகையில் தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கு இந்த திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக வாகனங்களை பதிவு செய்தல், வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கல், வாகன இலக்க தகடுகளை வழங்கல் மற்றும் வாகனங்களை பரிசோதித்து தொழில் நுட்ப அறிக்கையை வழங்குதல் போன்ற பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இருப்பினும் இந்த சேவைகள் முழமைப்படுத்தப்படாத மற்றும் இந்த சேவைகள் தொடர்பான தகவல் விசேடமாக தேவையான தரப்பினரின் வசதிக்காக இந்த ஒவ்வொரு துறைகள் தொடர்பிலும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளின் கையடக்க தொலைபேசி இலக்கம் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது.
சுமித் சி அழகக்கோன்
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர்