கந்தசாமி திரைப்படத்தை நிஜமாக்கிய கொள்ளை கும்பல்!

நடிகர் விக்ரம் நடித்த கந்தசாமி திரைப்படத்தை போன்று இணையத்தள கொள்ளைக்கார குழு ஒன்று, திருடிய பணத்தை நன்கொடையாக வழங்கி வருவது நிபுணர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

டார்க் ஹர்கேஸ் என்ற அந்த குழு பல மில்லியன் கணக்கான பணத்தினை திருடி இரண்டு தொண்டு அமைப்புகளுக்கு அப் பணத்தினை நன்கொடையாக கொடுத்துள்ளது.

அதற்கான சான்றுகளை இணையத்தில் அக் குழு பதிவேற்றியுள்ளது. இலாபகரமான நிறுவனங்களை மட்டுமே இணைய வழி மூலம் தாக்கி பணத்தை பெறுவதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.