இலங்கை உட்பட நான்கு நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் நாட்களில் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் மலைத்தீவுக்கு விஜயம் செய்வோர் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி மைக் பொம்கியோ இலங்கை உட்பட நான்கு நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை ஒக்டோபர் 25 – 30 வரை முன்னெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி இலங்கை வரும் மைக் பொம்பியோ ஒக்டோபர் 28 ஆம் திகதி கொழும்பில இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்காவிலுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலியானா பி. டெப்லிட்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் வருகை நாடுகளுக்கிடையேயான நட்பை வலுப்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.