அம்பாறை வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயார் !

அம்பாறை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.

நேற்று இரவு 29 வயதுடைய குறித்த தாயார் பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 குழந்தைகளும் பிரசவித்தார்.

மூவரில் ஒருவர் பெண் குழந்தையொன்றும், 2 ஆண் குழந்தைகள் எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com