ஐயாயிரம் ரூபாய் விவகாரம்; சமுர்த்தி அதிகாரி மீது தாக்குதல்!

மாத்தறையில் சமுர்த்தி அதிகாரி ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடகலஹேன பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை கொடுத்து விட்டுத் திரும்பிய சமுர்த்தி உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று (17) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது உதவித்தொகைபெற்ற பெண்மணி ஒருவரின் சகோதரனால் சமுர்த்தி அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.

தனக்கு 5 ஆயிரம் கொடுக்கவில்லை என்று கூறியே தன்னை குறித்த நபர் பொல்லால் தாக்கியுள்ளதாக 48 வயதுடைய சமுர்த்தி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து குடகலஹேன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபர் தெனியாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com