
அத்தியாவசிய பொருட்கள் என்ற போர்வையில் விவசாய இராசாயனப் பொருட்களை கொண்டுசென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதவாச்சி – புனான் பகுதியில் கடற்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான லொறியொன்றை அவதானித்த கடற்படையினர் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த லொறியில் அத்தியாவசிய பொருட்களுடன் எந்தவித சுகாதார பாதுகாப்புமின்றி ஏற்றிச் செல்லப்பட்ட விவசாய இரசாயன பொருட்கள் அடங்கிய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.