முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்சேதுபதி!

தமிழக முதல்வர் தாயார் உயிரிழந்த நிலையில், அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்சேதுபதியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ஆம் திகதி உயிரிழந்தார். அவரின் இறுதி அஞ்சலி மற்றும் காரிய நிகழ்வுகள் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது.

இந்த காரிய நிகழ்வுகளை பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை முடித்துக்கொண்டு நேற்று சிலுவம்பாளையத்தில் புறப்பட்டு இருந்து சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி இன்று சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின், முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு முதலமைச்சர் இல்லத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த செய்தியாளர்களை நடிகர் விஜய் சேதுபதி சந்தித்தார். அப்போது 800 பட விவகாரம் குறித்து கேட்ட போது, நன்றி வணக்கம் என்றால்

எல்லாம் முடிந்து விட்டது, இதை பற்றி பேசி இனி ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.