பிரித்தானியா ராணியின் 68 வருட பாரம்பரியத்தை மாற்றிய கொரோனா!


68 ஆண்டுகளில் முதன்முறையாக பிரித்தானிய மகாராணியாரின் பாரம்பரியத்தை மாற்றிய கொரோனா!!

பிரித்தானிய மகாராணியாருக்காக 68 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு பாரம்பரிய செயல் கொரோனாவால் தடைபட்டுள்ளது.


பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று ஹைட் பூங்காவில் 41 முறையும், ஒரு மணி நேரத்திற்குப்பின் லண்டன் கோபுரத்தில் 62 முறையும் துப்பாக்கியால் சுட்டு ராணுவ மரியாதை செலுத்துவார்கள் வீரர்கள்.

ஆனால், பிரித்தானியாவில் கொரோனா பரவி உயிர்களை பலிவாங்கிவரும் நிலையில், இம்முறை இந்த மரியாதை தனக்கு வேண்டாம் என மறுத்துள்ளார் பிரித்தானிய மகாராணியார்.


தனது 94ஆவது வயதை எட்டும் மகாராணியார், 15,000 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கும் இந்த சூழலில், இந்த ராணுவ மரியாதை சரியானதாக இருக்காது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com