உணவு பொருள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் இன்று திறப்பு

தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் உணவு பொருள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் இன்று திறந்திருக்கும்.

தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள உணவு பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று கொவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.