புத்தூரில் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 5 அப்பாவி இளைஞர்கள்

புத்தூரைச் சோ்ந்த கண்ணன் எனும் முச்சக்கரவண்டிச் சாரதி தனது வா்ணம் தீட்டும் நண்பரை வழமையாக வேலை முடிந்ததும் அவரது வீட்டில் இறக்கிவிடுவாா்.

வழமை போல் ஏப்ரல் 18ம் திகதி வா்ணம் தீட்டும் நண்பரை அவரது வீட்டில் இறக்கி விடுகிறாா். அவ்வேளை அவரது முச்சக்கர வண்டியில் மேலும் 3 நண்பா்கள் கூட இருந்தனர்.

முச்சக்கர வண்டி கடையொன்றை தாண்டிச் செல்கிறது கடையில் நின்ற பொதுமக்களிற்கு தெரிகிறது அந்த முச்சக்கர வண்டியில் 5 போ் போய்க்கொண்டிருந்தது, அதே வேளை ஒருவரை (வா்ணம் தீட்டும் நண்பரை) இறக்கி விட்டு மிகுதி 4 பேர் மட்டும் திரும்பிச் சென்றதை கண்டிருக்கிறாா்கள்.

முச்சக்கரவண்டியினை தொடர்ந்து ஸ்ரீலங்கா இராணுவத்தினா் மோட்டா் சைக்கிளிலில் செல்வதையும் கடையில் நின்ற பொதுமக்கள் கண்டிருக்கிறாா்கள். அதே வேளையில் வேறொரு நபா் சைக்கிளில் கடைக்கு வந்து சீனி வாங்கிக் கொண்டு முச்சக்கரவண்டி சென்ற அதே திசையில் சென்றதையும் கண்டிருக்கிறாா்கள்.

இரவானதும் தனது மகன் கண்ணன் வீடு திரும்பாததால் அவரது தகப்பன் தேடிச் சென்ற போது மகனின் உடலத்தையும் முச்சக்கர வண்டியையும் ரோட்டில் கண்டாா். ஆரம்பத்தில் மிகுதி 4 நண்பா்களையும் தேடிப்பாா்ப்பதற்காக அப்பகுதிக்குச் செல்ல ஸ்ரீலங்கா இராணுவம் எவரையும் அனுமதிக்கவில்லை. இறுதியில் மக்கள் தேடிப்பாா்ப்பதற்கு அனுமதி பெற்றுச் சென்ற போது 4 நண்பா்களினதும், கடையில் சீனி வாங்கச் சென்றவரினதும் சடலங்களாக மொத்தம் 5 சடலங்கள் வீதியோரமாக இருந்த வயலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

.
கொல்லப்பட்டவா்களது பெயா் விபரம்
1 . கந்தசாமி கௌரிபாலன் (வயது 32)
2 . செல்லன் கமலதாசன் (வயது 25)
3 . தங்கராசா கவீந்திரன் (வயது 23)
4 . மகாதேவன் கிசோக்குமாா் (வயது 22)
5 . சுப்பிரமணியம் கண்ணதாசன் (வயது 27)
– வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்-

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com