25 வயது பாடகியை குடும்பத்தாருடன் சேர்ந்து சீரழித்த எம்.எல்.ஏ!

இந்தியாவில், 25 வயது பாடகியை எம்.எல்.ஏ, அவரது மகன் மற்றும் உறவுக்கார நபர் என அடுத்தடுத்து சீரழித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர் விஜய் மிஸ்ரா. எம்.எல்.ஏவான இவர் மீது 25 வயது பாடகி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு, விஜய்மிஸ்ரா வீட்டில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு குறித்த பாடகியையும் விஜய் மிஸ்ரா அழைத்துள்ளார்.

இதனால் அந்த பாடகியும் வீட்டிற்கு சென்றுள்ளார். பாடல் நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில், பாடகி வீட்டிற்கு செல்ல தயாராகியுள்ளார்.

அப்போது, திடீரென்று குறித்த பாடகியை விஜய் மிஸ்ரா அவரை வீட்டிற்குள் வைத்து வன்கொடுமைய செய்துள்ளார். அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2015-ஆம் ஆண்டு மறுபடியும் வாரணாசியில் ஒரு ஹோட்டலில் வைத்து பாடகியை மீண்டும் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன் பின் அவரது மகன் மற்றும் உறவுக்கார நபர் ஒருவரை விஜய் மிஸ்ரா காரில் செல்லும் போது இறக்கிவிடும் படி பாடகியிடம் கூறியுள்ளார். இதனால் அந்த பாடகி அவர்களை அழைத்துச் சென்ற போது, அவர்களும் இவரை அடுத்தடுத்து வன்கொடுமை செய்துள்ளனர்.

இப்போது, விஜய் மிஸ்ரா நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு, ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் மிஸ்ராவிடம் எனது வீடியோக்கள் இருப்பதாலும், அவர் வேறு பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட பெரிய நபர் என்பதாலும், நடந்த கொடுமையை வெளியே சொல்ல பயந்து இருந்து விட்டேன்.

இப்போது அவர் நில ஆக்கிரமிப்பு வழக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே இப்போது தைரியமாக வெளியே சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.