இன்றைய பரிசோதனையில் 41 பேரில் யாருக்கும் தொற்றில்லை!

யாழில் இடம்பெற்ற இன்றைய(18) கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று(18) 41 பேருக்கான கொரோனா பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதில்

  • யாழ் போதனா வைத்தியசாலை – 4 பேர்
  • பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – ஒருவர்
  • சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 23 பேர்
  • மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்
  • ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 3 பேர்
  • முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 4 பேர்
  • புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 5 பேர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறிப்பிடக்கூடிய விடயமாக யாழில் கொரோனா அடையாளம் காணப்பட்டு வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பூரண குணமடைந்து நாளை(19) வீடு திரும்புகின்றனர் என்றும் அவர்கள் அடுத்த 14 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள் என்றும் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com