இன்றும் 5 மணித்தியாலம் துருவப்பட்ட மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு ஆணைக்குழு முன் அஜராகிய முன்னாள் ஜனாதிபதியிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் ஆஜராகும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4ஆவது தடவையாக குறித்த ஆணைக்குழு முன்பாக ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.