கெற்பேலியில் குடும்ப பெண் தற்கொலை!

தென்மராட்சி – கெற்பேலிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (16) காலை கெற்பேலி மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த தியாகராசா பரமேஸ்வரி (வயது – 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.