
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வாழும் சுமார் 100 மில்லியன் பிள்ளைகளுக்கு தட்டம்மை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச சுகாதார விசேட நிபுணர்கள் எ ச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பல நாடுகள் நோய் எ திர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன.
இதன் பிரதிபலனாக பிள்ளைகள் தட்டம்மை நோய்க்கு உள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெரும் நாடுகளே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் சீர்குலைவை எதிர்நோக்கி வருகின்றன.
இவ்வாறான 24 நாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. மெக்சிகோ, கம்போடியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதில் அடங்குகின்றன.