“ஈழ மக்களை விட ‘800’ என்ற படம் பெரிதல்ல” – சேரன்!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரான சேரன் விஜய் சேதுபதிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில்,

” உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என, உங்களை வாழ வைத்த தமிழ் மக்களை விட, ஈழத்தமிழ் மக்களிம் உயிர்போன கொடும் நிகழ்வைவிட, இந்தப் படம் ஒன்றும் பெரிதல்ல சகோதரா. விட்டுவிடுங்கள். உங்கள் நடிப்புத்தீனிக்கு ஏராளமான கதாபாத்திரங்கள் காத்துக் கிடக்கிறது” என்றுள்ளார்.