ஹாலிஎல – பசறை பகுதிகளில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் விசேட சோதனைகள்

ஊவாமாகாண சுகாதார திணைகளத்தின்  அறிவுறுத்தலின் கீழ் ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளின்  சுகாதார வைத்திய காரியாலயங்களுக்குற்பட்ட பிரதேசங்களில்   டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில்  விசேட சோதனைகள்  பிரதேச சுகாதார பரிசோதகர்களினால்  முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது டெங்கு நோய் பரவும் வகையில் காணப்பட்ட 50 க்கும் அதிகமான வீட்டுத்தோட்டம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் (காணி)  உரிமையாளர்களுக்கு டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றாடலை வைத்திருக்குமாறு  கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த டெங்கு ஒழிப்பு பரிசோதனையில்  மாகாண சுகாதார திணைக்களத்தின்  பரிசோதக அதிகாரிகளும் ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளின்  சுகாதார வைத்திய காரியாலயங்களுக்குற்பட்ட சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.  

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com