

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

விசேட அதிரடிப் படையினரும், வவுனியா நகரசபையும் இணைந்து இன்று காலை இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

கொரனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தி தொற்றை தடுக்கும் வகையில் வவுனியா சிவன் சிறுவர் இல்லம், சிவன் முதியோர் இல்லம், அன்பகம் உள்ளிட்ட சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் இவ்வாறு தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த இல்லங்கள் நீர்பம்பி மூலம் கழுவப்பட்டு தொற்று நீக்கும் மருந்துகளும் விசிறப்பட்டன.



