வவுனியாவில் ஊரடங்கிலும் மருந்தகங்கள் உட்பட பல வர்த்தக நிலையங்கள் திறப்பு!!

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள சமயத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்கள், சதொச விற்பனை நிலையம், மொத்த வியாபார நிலையங்கள், கோப்சிட்டி ஆகியன திறந்துள்ளன.

வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நேற்று (16.04.2020) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வந்து மீண்டும் 20ம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

ஊடரங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள், வங்கி ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு சதொச விற்பனை நிலையம் மற்றும் கோப்சிட்டி போன்றன திறந்துள்ளதுடன் நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com