பிரித்தானியாவில் வேலை இழப்பை தவிர்ப்பதற்கான அரசு செலுத்தும் 80% ஊதியம் ஜூன் வரை நீடிப்பு

பிரித்தானிய அரசாங்கம் அதன் furloughed ஊதியம் என்று அழைக்கப்படும் வேலை இழப்பை தவிர்ப்பதற்கான சம்பள கொடுப்பனவை முன்னர் மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தது. ஆனால் இப்பொழுது அந்த திட்டத்தை ஜூன் மாதம் வரைக்கும் நீடித்துள்ளது. இந்த தகவலை பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி சுனக் இன்று அறிவித்தார்.

நல்ல பாதுகாப்பு திரும்பும் வரை நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாத்து அதை நன்றாக இயங்கச் செய்வதன் மூலம் மக்களின் வாழ்வாரத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். இதன் காரணமாக நான் இந்த திட்டத்தை தொடர்ந்து மீளாய்வு செய்து பொருளாதாரத்தை மீட்பதற்கு உதவுவேன் என்று தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் தமது தொழிலார்களை வேலை செய்ய அனுமதிக் மாட்டார்கள் ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தொழிலாளியாகவே நீடிப்பார்கள். இவ்வாறு தொழிலாளர்கள் இருக்கும் வேளையில் அவர்களின் ஊதியத்தில் 80 சதவிகிதத்தை அரசாங்கம் இந்த முதலாளிகள் மூலம் தொழிலாளர்க்ளுக்கு வழங்குவார்கள். முதலாளிகள் விருப்பப்பட்டால் தொழிலாளர்கள் இழக்கும் 20% மான ஊதியத்தை அவர்களாக முன்வந்து தமது தொழிலாளர்களுக்கு வழங்க முடியும். ஆனால் அவர்களை வேலைக்கு அழைக்க முடியாது. அரசாங்கம் அதிகப்படியாக 2500 பிரித்தானிய பவுண்டுகளை மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஊதியமாக வழங்க முடியும்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com