2020ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை!

 புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள ஊடகத்தில் 248,072 மாணவர்கள், தமிழ் ஊடகத்தில் 83,622 மாணவர்கள் தோற்றுகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கு அமர தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கம்பஹா மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.