
நோயாளியின் அருகாமையில் செல்லாது மருத்துவ பரிசோதனை நடாத்த கூடிய கருவியொன்றை இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.

சிலாபம் வைத்தியசாலையில் மூக்கு, காது மற்றும் தொண்டை ஆகியன தொடர்பான விசேட மருத்துவ நிபுணராக கடமையாற்றி வரும் டொக்டர் ரிஸ்னி சகாப்பினால் இந்த கருவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தொண்டை, காது மற்றும் மூக்கு போன்ற உடலின் உறுப்புக்களுக்குள் சிறிய ரக கெமரா ஒன்றை உட்செலுத்தி கணினியின் உதவியுடன் நோய் தொடர்பில் கண்டறிய இந்த கருவி உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

நோயாளிக்கு அருகாமையில் செல்லாது மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதனால் மருத்துவர்கள் பாதுகாப்பு அங்கிகள் எதனையும் அணிந்து பரிசோதனை நடாத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவர்களுக்கு நோய் தொற்று பரவக்கூடிய ஆபத்து காணப்படுவதனால் இவ்வாறான ஓர் கருவியை கண்டு பிடித்து பாதுப்பான முறையில் சிகிச்சைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவர் சகாப் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து கொண்டே நோயாளியை பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடிய வகையிலான கருவியொன்றை உருவாக்கும் திட்டம் உள்ளது எனவும், வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் இந்த கருவியை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.