130 பொலிஸ் அதிகாரிகளை தனிமைப்படுத்துமாறு பணிப்பு!

 மேல் மாகாணத்தில் 130 பொலிஸ் அதிகாரிகளை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் உயர் டி.ஐ.ஜி. அலுவலகம் , மினுவாங்கொட , கடவத்த , மற்றும் மாரதன பொலிஸ் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளையே முன்னெச்ரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் தீவிரம் காரணமாக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்தி சென்றவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மூடப்பட்ட மினுவாங்கொட பொலிஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.