கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் பத்து நாடுகள் : இலங்கையும் இணைவு!!

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக உரிய தலைமைத்துவம் வழங்கிய 10 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. தொற்று நோய்களுக்கான உலகளாவிய சுட்டெண்ணில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள முகாமைத்து கணக்காளர் நிறுவனம் வழங்கிய கொவிட் -19 நெருக்கடிக்கு உலகளாவிய தலைமைத்துவ பதிலைக் கண்டறிதல்’ என்ற தலைப்பில், வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கை 9வது இடத்தை பிடித்துள்ளது.

கொவிட் -19 தொற்று நோயை எதிர்ப்பதில் நாட்டின் தலைமைத்துவம் மற்றும் அதன் சுகாதார அமைப்பின் தயார் நிலை எவ்வளவு திறமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இலவச சுகாதாரம் மற்றும் கல்வி கட்டமைப்பு உள்ளது என்றும், நாட்டில் ஒரு வலுவான சுகாதார சேவை உள்ளது என்றும் இது வைரஸை அகற்ற உதவியது என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்ட உலக அரச தலைவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com