வவுனியா ஒமந்தையில் காரில் கசிப்புடன் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் கைது!!

வவுனியா ஒமந்தை நகரப்பகுதியில் கசிப்புடன் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவரை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒமந்தை பகுதியில் சிவப்பு நிற காரில் கசிப்பு இருப்பதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை நகரப்பகுதியில் குறித்த காரினை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில்,

வாகனத்திலிருந்து 1500 மில்லிலீற்றர் கசிப்பினை பொலிஸார் கைப்பற்றியதுடன் கசிப்பினை வைத்திருந்த குற்றச்சாட்டில் வாகனத்தின் சாரதியான ஒமந்தை பகுதியினை சேர்ந்த 37வயதுடைய அரசியல் கட்சியின் முக்கியஸ்தரை பொலிஸார் கைது செய்யதுடன் வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கசிப்பினையும் குறித்த நபரையும் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய சமயத்தில் பிணையில் செல்வதற்கு நீதவான் உத்தரவு வழங்கியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக தற்போது கைது செய்யப்படும் பெரும்பானவர்களுக்கு பிணை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com