கொரோனா வைரஸ் தொற்று : ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைரஸூக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,158,594 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 14 லட்சத்து 56 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 56,579 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145,533 ஆக பதிவாகியுள்ளது.

இதேவைளை, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 475 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com