பிரான்ஸ் பாரிசில் இலங்கையர் வெறிச் செயல்:4சிறுவர்கள் உட்பட ஐவர் பலி-5 பேர் படுகாயம்

இன்று காலை பிரான்ஸ் Noisy Le Sec நகரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை 11 மணி அளவில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட அனைவருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் நால்வர் சிறுவர்கள் எனவும், ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.

தாக்குதலுக்கு இலக்கான மற்றுமொரு சிறுவன் இரத்தக்காயங்களோடு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்குச் சென்று உதவி கோரியுள்ளான்.

விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்திருந்தபோது வீட்டின் கதவுக்கு உள்பக்கமாக தாழிட்டு தடுப்பு வைக்கப்பட்டிருந்துள்ளது. தடுப்பினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்த காவல்துறையினர் மேலதிக வன்முறைகள் எதுவும் நிகழாமல் தடுத்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளன எனவும் அறிய முடிகிறது

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com