
பிரித்தானியாவில் ஊபர் சாரதியாக பணியாற்றிய தமிழர் கொரோனாவால் பலியான சம்பவம் அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.
இந்தியாவின் பெங்களூரு நகரத்தை சேர்ந்த தமிழர் 45 வயதான ராஜேஷ் ஜெயசிலன் என்பவரே கொரோனாவுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி லண்டன் நோத் விக் பார்க் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
மார்ச் 25 ஆம் திகதி ஹீத்ரோ விமான நிலையத்திற்கு சென்று திரும்பிய பின்னர் அவர் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதாக அவரது நண்பர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகரில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியா வந்துள்ள ராஜேஷ் ஜெயசீலன், கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் வாடகை டாக்ஸி சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான ராஜேஷ் ஜெயசீலன் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 11 ஆம் திகதி இறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா தாக்கம் லண்டனில் அதிகமாக காணப்பட்ட போதிலும். அவர் வேலைக்கு சென்றுள்ளார். அவர் இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தை பராமரிக்கவே வேலைக்கு செல்லவேண்டிய கட்டாய சூழ் நிலையில் இருந்துள்ளார்.
இரவு பகல் பாராமல் உழைக்கும் குணம் கொண்ட ராஜேஷ் ஜெயசீலன்,அவர் தங்கி இருந்த வாடகை வீட்டு உரிமையாளர், ஊபர் கார் ஓடுவது என்றால் எங்கள் வீட்டில் தங்கி இருக்க வேண்டாம் என்று கூறி விரட்டி விட்டார்கள் அப்படி இருந்தும் வெளியேற்றப்பட்டு தனது காரிலேயே தூங்கி வந்துள்ளார்.

