கிருமி அகற்றுவதில் மட்டு மாநாகர சபை தீவிரம்!

இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு உள்ளிட்ட சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையும் பல்வேறு மக்கள் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் நேற்று முன் தினம் பொது மக்கள் கூடிய நிரந்தர சந்தைகள், தற்காலிக சந்தைகள் உள்ளிட்ட பல்பொருள் விற்பனை நிலையங்கள், பொலிஸ் வளாகம், ஏ.ரி.எம். பணப்பரிமாற்று இயந்திர வளாகங்கள் ஆகிய இடங்களில் நேற்று (07) மாநகர சுகாதாரப் பிரிவினர் தொற்று நீக்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

மேற்படித் தொற்று நீக்கும் பணிகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர் து.மதன் மற்றும் தீயணைப்புப் பிரிவின் பொறுப்பாளர் வி.பிரதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கிருமியகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

1 Comment

  1. Looking at this article, I miss the time when I didn’t wear a mask. baccarat online Hopefully this corona will end soon. My blog is a blog that mainly posts pictures of daily life before Corona and landscapes at that time. If you want to remember that time again, please visit us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com