ட்ரம்ப் – பைடன் விவாதம் ! இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையிலான நேரடி தொலைக்காட்சி விவாதம் இன்று(30) இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், ”அமெரிக்காவில் 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க டிரம்ப் அரசு தவறிவிட்டது. ” எனவும் “நான் அமெரிக்கா ஜனாதிபதியானால், காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவேன்,” என்றார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

கொரோனா வைரஸ் மரணங்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கையை இந்தியா பகிரவில்லை எனவும் புவிவெப்பமயமாதலுக்கு இந்தியாவும் மற்ற பிற நாடுகளும் தான் முக்கிய காரணம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே குறித்த விவாதம் இடம்பெற்றுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com