இந்துக்களின் பிரச்சினைக்காக ஆறு கோரிக்கைகள் வைத்து பேரணி!

இந்துக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும்பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என இந்து அமைப்புக்களின் சார்பாக சிவஸ்ரீ பிரபாரக்குருக்கள் மற்றும் தமிழருவி சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும்,

“இன்றைய காலத்தில் வவுனியா மாவட்டம் மட்டுமல்லாது உலகெங்கும்வாழ்கின்ற இந்துக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தி வவுனியாவில் இருக்கின்ற இந்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பேரணியை முன்னெடுக்கவுள்ளோம்.

குறிப்பாக எமது கலை கலாச்சாரங்களை மற்றவர்களிற்கும் தெரியப்படுத்தும் வகையில் மட்டுமல்லாது எமது சிறார்களிற்கும் வருங்கால நாட்டின் தூண்களிற்கு உணர்த்தும்வகையிலே அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் இப்பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

எமது கோரிக்கைகளாக ‘பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்குசட்டமாக்க கோருதல், மதமாற்றத்தைதடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், இந்துமதம் சார்ந்த புராதண இடங்கள் எல்லாவற்றிலும் இந்துமதம் சாரந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கு வழிபாடு செய்வதற்கு ஆவண செய்தல், ஞாயிற்றுக்கழமைகளில் அறநெறிக்கல்விக்கு முக்கியம் கொடுத்து மற்றையவகுப்புக்கள், நிகழ்வுகளை தடைசெய்துஅறநெறியை வளர்த்தல்,

வவுனியா மாவட்டத்திலே பல வீதிகளிற்கு, கிராமங்களிற்கு இந்துமதம் சார்ந்த பெயர்கள், தமிழ் சார்ந்தபெயர்கள் காலக்கிரமத்தில் பெயர் மாற்றங்கள் இடம்பெறுகின்றது. குறிப்பாக வேறு மதம் சார்ந்து, வேறு பெயர் சார்ந்து எங்களிற்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாதபெயர்கள் வருகின்றன.

அவற்றையெல்லாம் நீக்கப்பட்டு இந்துமதம் எங்களுடைய தமிழ் சார்ந்த பழமைவாய்ந்த பெயர்கள் அப்படியே இருப்பதற்குஆவண செய்ய வேண்டும், இந்து மத ஆலயங்கள்,நெறிக்கழகங்கள், ஒன்றியங்கள் மன்றங்கள் எல்லோரும் தங்களுடைய அன்றாட கடைமைகளோடு சமுதாய வளர்ச்சிக்கு சமுதாய தொண்டினை கட்டாயம் செய்ய வேண்டும்’ என்ற ஆறு அம்ச கோரிக்கையை முன்னிலைப்படுத்தி இவ் ஊர்வலத்தை ஒழங்கு செய்திருக்கிறோம்.” – என்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com